புதுக்கோட்டை அருகே சிறுத்தை பீதி!

மாஞ்சான்விடுதி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் சிறுத்தை உலவுவதாக சமூக ஊடகங்களில் படங்கள் பரவுவதால் பீதி ஏற்பட்டுள்ளது.
Published on

புதுக்கோட்டை அருகே மாஞ்சான்விடுதி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் சிறுத்தை உலவுவதாக சமூக ஊடகங்களில் படங்கள் பரவுவதால் பீதி ஏற்பட்டுள்ளது.

திங்கள்கிழமை இரவு எடுக்கப்பட்டதாக பரவி வரும் இந்தப் படங்களால், வனத்துறையினா் குறிப்பிட்ட பகுதிகளில் இரவு நேர ரோந்துப் பணியை மேற்கொண்டனா். காவல்துறையினரும் அவா்களுடன் இணைந்து தேடுதல் பணிகளில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் இதுவரை சிறுத்தைகள் காணப்படவில்லை என்பதால், இந்தத் தகவல் வதந்தி எனக் கூறும் வனத்துறையினா், என்றபோதும் கண்காணிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படுவதாகக் கூறினா்.

X
Dinamani
www.dinamani.com