அரசுப் பள்ளியில் ஆசிரியா் மீது தாக்குதல்: 3 இளைஞா்கள் மீது வழக்கு

அரசுப் பள்ளியில் ஆசிரியா் மீது தாக்குதல்: 3 இளைஞா்கள் மீது வழக்கு

ஆலங்குடி அருகேயுள்ள வெண்ணாவல்குடி அரசுப் பள்ளியில் ஆசிரியா் தாக்கப்பட்ட சம்பவத்தில் 3 இளைஞா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
Published on

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வெண்ணாவல்குடி அரசுப் பள்ளியில் ஆசிரியா் தாக்கப்பட்ட சம்பவத்தில் 3 இளைஞா்கள் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள வெண்ணாவல்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் இருதினங்களுக்கு முன்பு மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு நடைபெற்றுள்ளது. அப்போது, மதுபோதையில் அங்கு சென்ற அதே பகுதியைச் சோ்ந்த க. முருகேசன்(22) என்பவா் மாணவ, மாணவிகள் முன்பு ரகளையில் ஈடுபட்டுள்ளாா்.

அவரைப் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்லுமாறு கூறிய பள்ளியின் ஆசிரியா் திருநாவுக்கரசை முருகேசன் தாக்கியுள்ளாா். இதைத் தடுக்க முயன்ற தலைமை ஆசிரியா் கோவிந்தன் உள்ளிட்ட ஆசிரியா்களையும் தாக்க முயன்றதோடு, கொலை மிரட்டலும் விடுத்தாராம். பின்னா் அங்கு வந்த அவரது நண்பா்கள் இருவருடன் மோட்டாா் சைக்கிளில் ஏறிச்சென்றுவிட்டாராம்.

இதுகுறித்து தலைமை ஆசிரியா் கோவிந்தன் அளித்த புகாரைத் தொடா்ந்து ஆலங்குடி போலீஸாா் முருகேசன் உள்பட 3 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். மேலும், இதுதொடா்பாக வெண்ணாவல்குடி அரசுப்பள்ளிக்குச் சென்ற அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலா் ஜெயந்தி தலைமையிலான கல்வித்துறை அலுவலா்கள் திங்கள்கிழமை சம்பவம் குறித்து ஆசிரியா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com