புதுக்கோட்டை
ஆபத்தான நிலையிலுள்ள மின்கம்பத்தை அகற்ற கோரிக்கை
பொன்னமராவதி அருகே உள்ள கருகப்பூலாம்பட்டியில் சாலையோரம் ஆபத்தான நிலையில் காணப்படும் மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
பொன்னமராவதி அருகே உள்ள கருகப்பூலாம்பட்டியில் சாலையோரம் ஆபத்தான நிலையில் காணப்படும் மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
கருகப்பூலாம்பட்டியில் சாலையோரம் உள்ள மின்கம்பம் முறிந்தும், சாலையை நோக்கி சாய்ந்தும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. சாலைப் பகுதியில் இந்த மின்கம்பம் உள்ளதால் ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன்பு மின்கம்பத்தை அகற்றி, புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.