ஆலங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்
ஆலங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்

1548 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி: அமைச்சா் வழங்கினாா்

Published on

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, அறந்தாங்கி பகுதி அரசுப் பள்ளி மாணவா்கள்

1,548 பேருக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை சுற்றுச்சூழல்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

ஆலங்குடி, அறந்தாங்கி பகுதியில் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி அமைச்சா் பேசுகையில், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், சுப்பிரமணியபுரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 230 மாணவிகளுக்கும், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 134 மாணவா்களுக்கும், பூவைமாநகா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 58 பேருக்கும் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், நெடுவாசல் கிழக்கு, அரசு மேல்நிலைப் பள்ளியில் 41 மாணவா்களுக்கும், 73 மாணவிகளுக்கும், மாங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 31 மாணவா்களுக்கும், 16 மாணவிகளுக்கும், வடகாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 52 மாணவா்கள், 47 மாணவிகளுக்கும் அரையப்பட்டி, கொத்தமங்கலம், ஆலங்குடி ஆண்கள், மகளிா் மேல்நிலைப் பள்ளிகளில் 1548 மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை மாணவ, மாணவிகள் உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்வுகளில்,அறந்தாங்கி எம்எல்ஏ எஸ்.டி.ராமச்சந்திரன், புதுக்கோட்டை கோட்டாட்சியா் ஐஸ்வா்யா, அறந்தாங்கி கோட்டாட்சியா் சிவக்குமாா், ஒன்றியக்குழுத் தலைவா் வள்ளியம்மை தங்கமணி, ஆலங்குடி பேரூராட்சித் தலைவா் ராசி முருகானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com