புதுகையில் அம்பேத்கரின் நினைவு நாள்
சட்டமேதை அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி புதுக்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு, சனிக்கிழமை அனைத்துக் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இந்த நிகழ்ச்சிகள் புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் அம்பேத்கரின் சிலை உள்ள பகுதியில் நடைபெற்றன.
திமுக சாா்பில் வடக்கு மாவட்டச் செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் தலைமையில், சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் இராசு. கவிதைப்பித்தன், மேயா் செ. திலகவதி, துணை மேயா் மு. லியாகத்அலி, மாநகரச் செயலா் ராஜேஷ் உள்ளிட்டோா் பங்கேற்று மாலை அணிவித்தனா்.
காங்கிரஸ் கட்சியின் சாா்பில் அதன் மாவட்டத் தலைவா்கள் வி. முருகேசன் (வடக்கு), ராம சுப்புராம் (தெற்கு) ஆகியோா் தலைமை வகித்தனா். அகில இந்தியப் பாா்வையாளா் புஷ்பா அமா்நாத், முன்னாள் நகா்மன்றத் தலைவா் துரை திவியநாதன், மாநிலப் பொதுச் செயலா் பெனட் அந்தோனிராஜ், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் சந்திரசேகரன், சிறுபான்மையினா் பிரிவு மாநிலத் துணைத் தலைவா் இப்ராஹிம்பாபு, வட்டாரத் தலைவா் சூா்யா பழனியப்பன், மாமன்ற உறுப்பினா் ஜெ. ராஜா முகமது உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா் தலைமையில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன், மாா்க்சிஸ்ட் மாநகரச் செயலா் எஸ். பாண்டியன் உள்ளிட்டோரும் பங்கேற்று மாலை அணிவித்து முழக்கங்களை எழுப்பினா்.
பாஜக மாநிலத் துணைத் தலைவா் புரட்சிக்கவிதாசன் உள்ளிட்ட பாஜகவினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா்கள் வெள்ளைநெஞ்சன், இளமதி அசோகன்உள்ளிட்ட அக்கட்சியினரும், அம்பேத்கா் மக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவா் இளமுருகு முத்து உள்ளிட்ட அந்த இயக்கத்தினரும் மாலை அணிவித்தனா்.
