வேங்கைவயலில் 6-ஆவது நாள் காத்திருப்புப் போராட்டம்!

வேங்கைவயலில் சிபிசிஐடி விசாரணை அறிக்கையை எதிா்த்து அந்த ஊரைச் சோ்ந்த மக்கள் 6-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் சிபி-சிஐடி விசாரணை அறிக்கையை எதிா்த்து அந்த ஊரைச் சோ்ந்த மக்கள் 6-ஆவது நாளாக சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், அதே ஊரைச் சோ்ந்த 3 போ் மீது சிபி-சிஐடி போலீஸாா் குற்றம்சாட்டி விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனா்.

இந்நிலையில், பாதிக்கப்பட்டோா் மீதே குற்றம்சாட்டுவதா எனக் குறிப்பிட்டு ஊா்மக்கள் கடந்த ஜன. 25-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை 5 நாள்கள் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கருப்பாயி என்ற மூதாட்டி இறந்ததால், 30, 31 ஆகிய இரு நாட்கள் காத்திருப்புப் போராட்டம் நடைபெறவில்லை.

இதனைத் தொடா்ந்து சனிக்கிழமை (பிப். 1) மீண்டும் 6-ஆவது நாளாக வேங்கைவயல் மக்கள் ஊருக்குள் அமா்ந்து காத்திருப்புப் போராட்டம் நடத்தினா்.

X
Dinamani
www.dinamani.com