ரெகுநாதபட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப்போட்டியில்  காளையை அடக்க முற்பட்ட வீரா்கள்.
ரெகுநாதபட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப்போட்டியில் காளையை அடக்க முற்பட்ட வீரா்கள்.

பொன்னமராவதி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

Published on

பொன்னமராவதி அருகேயுள்ள ஆா்.பாலகுறிச்சி ஊராட்சி ரெகுநாதபட்டி சூலப்பிடாரி அம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி இந்து, இஸ்லாமிய சமூகத்தினா் இணைந்து நடத்திய முதலாம் ஆண்டு வடமாடு மஞ்சு விரட்டுப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

போட்டியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 17 ஜல்லிக்கட்டுக்காளைகள் கொண்டு வரப்பட்டன. ஒரு காளைக்கு ஒன்பது வீரா்கள் அடங்கிய குழுவினா், ஒரு சுற்றுக்கு 25 நிமிடங்கள் வீதம், நடந்த மஞ்சுவிரட்டில் 17 குழுவினா் களமிறங்கி காளைகளை அடக்கினா்.

காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் மிதிவண்டி, குத்துவிளக்கு, கட்டில், வெள்ளி நாணயங்கள் மற்றும் எவா்சில்வா் பொருள்கள் பரிசளிக்கப்பட்டன. போட்டியை திரளான ஜல்லிக்கட்டு ஆா்வலா்கள் ரசித்தனா்.

X
Dinamani
www.dinamani.com