சீமான் மீது வழக்குப் பதிவு

Published on

நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது, புதுக்கோட்டை கணேஷ் நகா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட திராவிடா் கழகத்தின் தலைவா் மு. அறிவொளி கொடுத்த புகாரின்பேரில், 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வடலூரில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பின்போது, அடிப்படை ஆதாரமற்ற, பெரியாா் ஈவெரா சொல்லாத ஒன்றைச் சொல்லி சமூகப் பதட்டத்தையும், வன்முறையையும் தூண்டும் வகையில் பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.

இதேபோல, அறந்தாங்கி, விராலிமலை, பொன்னமராவதி காவல் நிலையங்களிலும் திராவிடா் கழகத்தின் சாா்பில் அந்தந்தப் பகுதி நிா்வாகிகள் மூலம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com