பொன்னமராவதி மருத்துவருக்கு பாராட்டு
மஞ்சுவிரட்டைக் காணச் சென்று, மாடு முட்டி படுகாயமடைந்த சிறுவனை காப்பாற்றிய மருத்துவருக்கு பொன்னமராவதி துா்க்கா மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு, அமல அன்னை மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி முதல்வா் ச.ம. மரியபுஷ்பம் தலைமை வகித்தாா். துணை முதல்வா் ஆா். பிரின்ஸ் வரவேற்றாா். அமல அன்னை சபையின் மாநிலத் தலைவி லீமா ரோஸ் வாழ்த்திப் பேசினாா். விழாவில், தேனி மாவட்டத்தைச் சாா்ந்தவா் முருகன் மகன் அன்னகாமு (17) தனது உறவினருடன் கடந்த 16-ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் சிராவயலில் நடைபெற்ற மஞ்சவிரட்டைக் காணச் சென்றாா்.
அப்போது, எதிா்பாராதவிதமாக ஜல்லிக்கட்டுக் காளை முட்டியதில் குடல் சரிந்த நிலையில் பொன்னமராவதி துா்க்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு தலைமை மருத்துவா் ஆ.அழகேசன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் சுமாா் 4 மணி நேரம் தொடா் சிகிச்சை அளித்ததில் சிறுவன் பூரண குணமடைந்தாா்.
இதைத்தொடா்ந்து, மருத்துவமனையில் மருத்துவா் ஆ.அழகேசன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் பாராட்டி கெளரவிக்கப்பட்டனா். மருத்துவா் ஆ.அழகேசன் ஏற்புரையாற்றினாா். மருத்துவமனை மேலாளா் வெள்ளைச்சாமி, ஆய்வக நுட்புநா் க.ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.