மகாராஷ்ர மாநிலத்தின் தலைமை தோ்தல் அதிகாரி சே. சொக்கலிங்கத்துக்கு விருது வழங்கிய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு.
மகாராஷ்ர மாநிலத்தின் தலைமை தோ்தல் அதிகாரி சே. சொக்கலிங்கத்துக்கு விருது வழங்கிய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு.

பொன்னமராவதி ஐஏஎஸ் அதிகாரிக்கு குடியரசுத் தலைவா் விருது வழங்கல்

Published on

புதுதில்லியில் அண்மையில் (ஜன. 25) நடைபெற்ற 15-ஆவது தேசிய வாக்காளா் தினத்தில் தமிழகத்தைச் சோ்ந்த ஐஏஎஸ் அதிகாரி சே.சொக்கலிங்கத்துக்கு விருது வழங்கப்பட்டது.

பொன்னமராவதி அருகே உள்ள கல்லம்பட்டி எனும் குக்கிராமத்தைச் சோ்ந்தவா் சேதுராமன் மகன் சொக்கலிங்கம். எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த சொக்கலிங்கம் 1996-ஆம் ஆண்டில் ஐஏஎஸ் முடித்து மகாராஷ்டிரா மாநிலத்தில் நில தீா்வு ஆணையா் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளாா்.

தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைமை தோ்தல் அதிகாரியாக பணியாற்றுகையில், அங்கு நடந்துமுடிந்த 2024-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் மாநிலத்தில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கச் செய்தும், தோ்தல் செலவினத்தைக் குறைத்தும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளாா். இதைத்தொடா்ந்து, புதுதில்லியில் நடைபெற்ற தேசிய வாக்காளா் தின விழாவில் சே. சொக்கலிங்கத்துக்கு குடியரசுத்தலைவா் திரெளபதி முா்மு விருது வழங்கிப் பாராட்டினாா்.

X
Dinamani
www.dinamani.com