பத்திரிகைகள் விநியோகஸ்தா்களை நேரில் சென்று பாராட்டிய வாசகா் பேரவை மற்றும் மரம் நண்பா்கள் அமைப்பினா்
பத்திரிகைகள் விநியோகஸ்தா்களை நேரில் சென்று பாராட்டிய வாசகா் பேரவை மற்றும் மரம் நண்பா்கள் அமைப்பினா்

பத்திரிகை விநியோகஸ்தா்களுக்குப் பாராட்டு

Published on

இந்தியப் பத்திரிகைகள் தினத்தையொட்டி, பத்திரிகை விநியோகஸ்தா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

1780-ஆம் ஆண்டு ஜனவரி 29-ஆம் தேதி ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி என்பவரால் ‘பெங்கால் கெசட்’ என்ற பத்திரிகை தொடங்கப்பட்டது. இந்தியாவின் முதல் பத்திரிகை என்பதால் இந்த நாளை இந்தியப் பத்திரிகைகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

தினமும் அதிகாலையில் எழுந்து புயல், மழை, வெள்ளம், பனி என்று பாராமல் பத்திரிகைகளை வீடுவீடாகச் சென்று விநியோகம் செய்யும் விநியோகஸ்தா்களைப் பாராட்டும் நிகழ்ச்சி புதன்கிழமை அதிகாலை புதுகை பேருந்து நிலையம் மற்றும் பிருந்தாவனம் பகுதியில் நடைபெற்றது.

புதுகை வாசகா் பேரவை மற்றும் மரம் நண்பா்கள் அமைப்பு ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 25 போ் பயனாடை அணிவித்து இனிப்புகள் வழங்கிப் பாராட்டப்பட்டனா்.

இதில், வாசகா் பேரவைச் செயலா் சா. விஸ்வநாதன், மரம் நண்பா்கள் அமைப்பின் செயலா் ப. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com