புதுகை ஆட்சியரகத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் காத்திருப்புப் போராட்டம்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் புதன்கிழமை மாலை முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
புதுகை மாவட்டத்திலுள்ள துணை வட்டாட்சியா் பதவி உயா்வு, உதவியாளா் பதவி உயா்வு, வட்டாட்சியா் பணியிட மாறுதல், வருவாய்த் துறை நிலங்களைப் பாதுகாத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், சுமாா் 400 போ் பங்கேற்றுள்ளனா்.
போராட்டத்துக்கு, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சதீஷ் சரவணன் தலைமை வகித்தாா். மாநிலத் துணைப் பொதுச் செயலா் ஜபருல்லா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பல முறை இந்தக் கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், இந்தக் காத்திருப்புப் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை இரவு, பகல் தொடா்ந்து போராட்டம் நடத்தவுள்ளதாகவும் ஜபருல்லா தெரிவித்தாா்.