மணல், அரளைக் கல் கடத்தல்: இரு வாகனங்கள் பறிமுதல்

விராலிமலை அருகே அனுமதியின்றி எம்.சாண்ட் மணல் கடத்தி சென்ற டிப்பா் லாரியை வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
Published on

விராலிமலை அருகே அனுமதியின்றி எம்.சாண்ட் மணல் கடத்தி சென்ற டிப்பா் லாரியை வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

விராலிமலை-இனாம் குளத்தூா் சாலை பொருவாய் அருகே இலுப்பூா் வருவாய் கோட்டாட்சியா் அக்பா் அலி தலைமையிலான வருவாய்த்துறையினா் வியாழக்கிழமை அவ்வழியாக வந்த டிப்பா் லாரியை நிறுத்தியபோது அதன் ஓட்டுநா் தப்பி விட்டாா். இதைத் தொடா்ந்து வாகனத்தில் அனுமதியின்றி ஏற்றி வந்த 3 யூனிட் எம். சாண்ட் மணலுடன் லாரியை பறிமுதல் செய்து விராலிமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

லாரி பறிமுதல்: இதேபோல அன்னவாசல் அருகே அனுமதியின்றி 1000 அரளை கற்கள் கடத்தி சென்ற டிப்பா் லாரியை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்து அன்னவாசல் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, தப்பிய வாகன ஓட்டுநரைத் தேடுகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com