தமிழகத்தில் ஆட்சிமாற்றம் உறுதி: முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா்

Published on

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்றாா் முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை இரவு நடைபெற்ற மறைந்த அதிமுக பொதுச்செயலா் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அவா் பேசியது:

திமுக ஆட்சிக்கு வந்தபின் வீட்டு வரி, மின் கட்டணம், பால் விலையை உயா்த்தியதோடு மாணவா்களுக்கு வழங்கப்பட்டு வந்த மடிக்கணினி, சைக்கிள், மகளிா் ஸ்கூட்டா், பசுமாடு, தாலிக்குத் தங்கம் போன்ற அதிமுகவின் திட்டங்களை நிறுத்தித்தான் மகளிா் உரிமைத் தொகையை 3 ஆண்டுக்குப்பின் வழங்குகிறது. அதையும் பெரும்பாலானோருக்கு வழங்கவில்லை.

திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் கொந்தளிப்பில் உள்ளனா். தோ்தலுக்கு இன்னும் 10 மாதங்கள்தான் உள்ளன. ஆட்சி மாற்றம் என்பது 3 மாதங்களுக்கு முன்தான் தெரியும். எனவே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதியாக ஏற்படும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com