கந்தா்வகோட்டையில் துளிா் வாசகா் திருவிழா

Published on

கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மூலம் வெளிவரும் துளிா் இதழ் வாசகா் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் க. தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா். துளிா் வாசகா் திருவிழாவுக்கு பிப்ரவரி மாத இதழ்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. நிகழ்வை தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தா்வகோட்டை ஒன்றியச் செயலரும், ஆசிரியருமான அ. ரகமதுல்லா ஒருங்கிணைத்தாா். நிகழ்வில் ஆசிரியா்கள் மணிமேகலை, சிந்தியா உள்ளிட்டோ கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com