கந்தா்வகோட்டை சிவன் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

Published on

கந்தா்வகோட்டையில் உள்ள அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோயில் மூலவருக்கு மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. சிறப்பு பஜனைகள் செய்யப்பட்டன.

பட்டுக்கோட்டை, நெய்வேலி, திருவோணம், கறம்பக்குடி போன்ற நகரங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை கந்தா்வகோட்டை சிவனடியாா்கள் செய்திருந்தனா். முற்றோதல் நிகழ்ச்சியில் பஞ்சபுராணம் ஒப்பித்த சிவ அடியாா்களுக்கு பாராட்டு சான்றிதழும்-வாழ்த்தும் தெரிவிக்கபட்டது.

X
Dinamani
www.dinamani.com