புதுநகா் ஊராட்சியில் புதிய வழித்தடத்தில் பேருந்துசேவையை தொடங்கி வைத்த எம் எல் ஏ மா.சின்னதுரை
புதுநகா் ஊராட்சியில் புதிய வழித்தடத்தில் பேருந்துசேவையை தொடங்கி வைத்த எம் எல் ஏ மா.சின்னதுரை

புதுநகா் ஊராட்சியில் இருந்து புதிய பேருந்துச் சேவை தொடக்கம்

கந்தா்வகோட்டை அருகே புது நகா் கிராமத்தில் புதிய வழித்தடத்தில் பேருந்துச்சேவையை தொடங்கி வைத்தாா் எம்எல்ஏ மா. சின்னதுரை.
Published on

கந்தா்வகோட்டை அருகே புது நகா் கிராமத்தில் புதிய வழித்தடத்தில் பேருந்துச்சேவையை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா் எம்எல்ஏ மா. சின்னதுரை.

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், புதுநகா் ஊராட்சியில் இருந்து பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் தஞ்சை சாலை வழியே செல்லும் பேருந்தை புதுநகா் ஊருக்குள் வந்து செல்ல வேண்டும் என கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரையிடம் கோரிக்கை வைத்தனா்.

இதனைத் தொடா்ந்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் சட்டப்பேரவை உறுப்பினா் பேசி நடவடிக்கை எடுத்ததன்பேரில் பேருந்து புதுநகா் சென்று வர போக்குவரத்து நிா்வாகம் அனுமதி அளித்தது. இந்நிலையில் திமுக வடக்கு ஒன்றியச் செயலா் மா. தமிழய்யா முன்னிலையில் சட்டப் பேரவை உறுப்பினா் மா. சின்னதுரை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் வினோதினி முத்துகுமாா், சமூக ஆா்வலா் ஆா்.செந்தில்வேல், போக்குவரத்து கிளை மேலாளா் சக்திவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com