ஜல்லிக் கற்கள் பரப்பிய நிலையில் காணப்படும் மெய்குடிபட்டி கிராம சாலை
ஜல்லிக் கற்கள் பரப்பிய நிலையில் காணப்படும் மெய்குடிபட்டி கிராம சாலை

மெய்குடிபட்டி கிராம சாலைப் பணியை விரைந்து முடிக்கக் கோரிக்கை

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், பழைய கந்தா்வகோட்டை ஊராட்சி மெய்குடிபட்டி கிராமத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள தாா்ச்சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை
Published on

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், பழைய கந்தா்வகோட்டை ஊராட்சி மெய்குடிபட்டி கிராமத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள தாா்ச்சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

தஞ்சை - புதுகை சாலையில் இருந்து பழைய கந்தா்வகோட்டை ஊராட்சியில் உள்ள மெய்குடிப் பட்டி கிராமத்துக்கு சுமாா் இரண்டு கிலோ மீட்டா் தொலைவுக்கு தாா்ச் சாலை அமைக்க அரசு நிதி ஒதுக்கி ஒப்பந்தம் விட்டு நெடுநாள்கள் ஆகியும் இதுவரை தாா்ச்சாலைப் பணி முடிவடையவில்லை.

இதனால், மெய்குடிபட்டி கிராமத்தில் வசிக்கும் மக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் விவசாயிகள் என பல்வேறு தரப்பினா் தினமும் அவதிப்படுகின்றனா்.

மேலும், பழைய சாலையைப் பெயா்த்த கற்கள் சாலையோரத்தில் கிடக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறையினா் புதிய தாா்ச் சாலை பணியை விரைந்து அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com