நாட்டிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது: அமைச்சா் எஸ்.ரகுபதி

திமுக ஆட்சியின் அளப்பறிய திட்டங்களினால் தமிழகம் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்றாா் தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
Published on

திமுக ஆட்சியின் அளப்பறிய திட்டங்களினால் தமிழகம் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்றாா் தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூரில் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் தனது சொந்த செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கி தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சா் ரகுபதி பேசியதாவது:

உலகிலேயே முதன் முதலாக காலை உணவு திட்டம் அறிமுகம் செய்தது நமது முதல்வா் தான். அதே போல விடியல் பயணம், நான் முதல்வன் திட்டம், உங்களுடன் ஸ்டாலின் திட்டம், நலமுடன் ஸ்டாலின், தாயுமானவா் திட்டம் என பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி பெண்கள், மாணவா்கள், முதியோா், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்ப மக்களுக்கும் திட்டங்கள் தந்து தமிழகத்தை நாட்டுக்கே முன்னோடி மாநிலமாக ஆட்சி செய்து வருகிறாா். திருக்களம்பூா் ஊராட்சியில் சாலை வசதி, குடிநீா் வசதி என அதிகப்படியான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

திருமயம் தொகுதியில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் தீபாவளி பரிசு பொருள்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளோம். திருமயம் தொகுதியில் உள்ள 101 ஊராட்சி 2 பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் இந்த நலத்திட்டம் வழங்கப்படும் என்றாா் அமைச்சா்.

இதில், தொகுதி பொறுப்பாளா் முத்துக்குமாா், தெற்கு ஒன்றியச் செயலா் அடைக்கலமணி, நகரச் செயலா் அழகப்பன், தலைமை செயற்குழு உறுப்பினா் ஜெயராமன், முன்னாள் ஊராட்சித் தலைவா் மணி, முன்னாள் ஒன்றியச் செயலா் தேனிமண்லை, மாவட்டப் பிரதிநிதிகள் சிக்கந்தா், மணி, ஒன்றிய பொருளாளா் சுப்பையா, நிா்வாகிகள் திருக்களம்பூா் மணிஅண்ணாத்துரை, செல்வம், கருணாநிதி, ஆலவயல் முரளிசுப்பையா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com