புதுக்கோட்டை
உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைக்க கருத்துக் கேட்பு
கந்தா்வகோட்டை அருகே உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைப்பது குறித்த பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை தாலுகா, பிசானத்தூா் கிராமத்தில் உயிரி இந்த மருத்துவக் கழிவு ஆலை அமைந்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் எனக் கூறி இப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில் கோட்டாட்சியா் ப. ஐஸ்வா்யா தலைமையில், வட்டாட்சியா் ம. ரமேஷ் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய துறை அலுவலா்கள் முன்னிலையில் நடைபெற்ற கருத்து கேட்புக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினா், சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் பங்கேற்று கருத்து தெரிவித்தனா்.
