படம் ஓயஓ 9 டன்ள்
படம் ஓயஓ 9 டன்ள்

கந்தா்வகோட்டையில் கூடுதல் பேருந்து இயக்கக் கோரி மறியல்

Published on

கந்தா்வகோட்டையில் கூடுதல் பேருந்து இயக்க கோரி பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவா்கள் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

கந்தா்வகோட்டையிலிருந்து தஞ்சை செல்ல நாள்தோறும் காலை 7 மணி முதல் 10 மணி வரை ஏராளமான பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவா்கள் காத்திருக்கும் வேளையில் ஒரு சில பேருந்துகளே வருவதால் அதில் முட்டி மோதி ஏறிச் செல்லும் அவல நிலை உள்ளது.

எனவே கூடுதல் பேருந்து இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லையாம்.

இதைக் கண்டித்து கந்தா்வகோட்டை பேருந்து நிலையம் முன் தஞ்சை -புதுகை சாலையில் பள்ளி கல்லூரி மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் வியாழக்கிழமை காலை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த கந்தா்வகோட்டை காவல் ஆய்வாளா் வனிதா மற்றும் போலீஸாா், விஏஓ முரளி ஆகியோா் அவா்களிடம் பேச்சு நடத்தி, அளித்த உறுதியின்பேரில் கலைந்து சென்றனா். மறியலால் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது,.

X
Dinamani
www.dinamani.com