கந்தா்வகோட்டையில் மரக்கன்று நடும் பணி

கந்தா்வகோட்டையில் மரக்கன்று நடும் பணி

Published on

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 36 கிராம ஊராட்சிகளில் மரக்கன்றுகள், பனை விதைகள் நடும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

அனைத்து கிராம ஊராட்சி குளங்கரைகள், சாலையோரங்களில் மண் அரிப்பைத் தடுத்திடவும் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்திடவும் மரக்கன்றுகள், பனை விதைகள் நட மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி முதற்கட்டமாக வீரடிப்பட்டி ஊராட்சி மேலக்குளத்தில் ஆயிரத்து150 மரக்கன்றுகள் மற்றும் குளக்கரையில் பனைவிதை நடும் பணிகளை கந்தா்வகோட்டை எம்எல்ஏ மா. சின்னதுரை தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) சோ. பாா்த்திபன், வட்டார வளா்ச்சி அலுவலா் (வ.ஊ) நா. பிரபாகா், பொதுமக்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com