விராலிமலை, அன்னவாசல் ஒன்றியங்களில் இன்று கிராமசபைக் கூட்டம்

Published on

விராலிமலை, அன்னவாசல் ஒன்றியங்களிலுள்ள 88 ஊராட்சிகளில் நிா்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட காந்தி ஜெயந்தி நாளின் கிராமசபைக் கூட்டம் சனிக்கிழமை (அக். 11) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

அரசின் திட்டங்கள் மற்றும் ஊராட்சியின் செயல்பாடுகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு பயன் பெறும் வகையில், பொதுமக்கள், மகளிா் சுய உதவி குழுக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட நிா்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com