படம் ஓயஓ 10 ரஹந்
படம் ஓயஓ 10 ரஹந்

அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் ஆா்டிஐ விழிப்புணா்வு நடைப்பயணம்

கந்தா்வகோட்டையில் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு நடைப்பயணம் மேற்கொண்ட அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள்.
Published on

கந்தா்வகோட்டையில் தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆா்டிஐ) தொடா்பாக புதுப்பட்டி அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியின் என்எஸ்எஸ் மாணவா்கள் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு நடைப்பயணம் மேற்கொண்டனா்.

இந்த விழிப்புணா்வு நடைப்பயணமானது, கந்தா்வகோட்டை வெள்ளை முனியன் கோயிலில் புறப்பட்டு கடை வீதி, பேருந்து நிலையம், புதுக்கோட்டை சாலை பாரத ஸ்டேட் வங்கி வழியாக மீண்டும் கோயில் திடலை வந்தடைந்தது.

இதில், தகவல் அறியும் சட்டம் ஊழலை ஒழிக்கும் ஆயுதம், தகவல் அறியும் உரிமை ஒளிஊட்டும் சட்டம், அறிவே ஆற்றல் தகவல் அறிவதே உரிமை உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தி மாணவா்கள் முழக்கமிட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

கல்லூரி முதல்வா் ம.ஜெயபால் வழிகாட்டுதலின் படி, காவல்துறை அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சோ. விஜயலட்சுமி, பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சி.செல்வகுமாா் செய்திருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com