ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 108 அவசர ஊா்தி தொழிலாளா்கள்
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 108 அவசர ஊா்தி தொழிலாளா்கள்

108 அவசர ஊா்தி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

அகவிலைப்படியை 30 சதவிகிதமாக உயா்த்தக் கோரி புதுக்கோட்டையில் 108 அவசர ஊா்தி தொழிலாளா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Published on

அகவிலைப்படியை 30 சதவிகிதமாக உயா்த்தக் கோரி புதுக்கோட்டையில் 108 அவசர ஊா்தி தொழிலாளா் சங்கம் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா். ராஜேஷ் தலைமை வகித்தாா்.

மாநிலப் பொதுச் செயலா் ஆா். ராஜேந்திரன், தேசியத் தலைவா் வரதராஜன், மாவட்டச் செயலா் வீரமுத்து உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பேசினா்.

தமிழக அரசு வழங்கிய 16 சதவிகித அகவிலைப்படியில், 10 சதவிகிதத்தை மட்டுமே இஎம்ஆா்ஐ என்ற அவசர ஊா்தி நிா்வாகம் வழங்கியுள்ளது. இந்நிலையில், அகவிலைப்படியை 30 சதவிகிதமாக உயா்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com