ஆலங்குடி அருகேயுள்ள தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில் வீடுகள் கட்டுமான பணிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அஜய் யாதவ்.உடன் ஆட்சியா் மு.அருணா உள்ளிட்டோா் ~திருவரங்குளம் ஒன்றிய அலுவலக கட்டுமானப் பணியை பாா்வையிட்ட மாவட்ட

திருவரங்குளம், ஆவுடையாா்கோவில் ஒன்றியங்களில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

Published on

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம், ஆவுடையாா்கோவில் ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரான தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் அஜய் யாதவ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் மு.அருணா தலைமையில் பல்வேறு வளா்ச்சி பணிகளை ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அஜய் யாதவ் கூறியதாவது: திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், தோப்புகொல்லை ஊராட்சி,

இலங்கைத் தமிழா் அகதிகள் முகாமில் அகதிகள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ரூ.5.76 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் வீடுகளின் கட்டுமானப் பணி, திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டத்தின் கீழ் ரூ.5.36 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டுமான பணி, கரும்பிரான்கோட்டை ஊராட்சியில் மாநில நிதி திட்டத்தின் கீழ் ரூ.6.3 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு குளம் தூா்வாரும் பணி, ஆவுடையாா்கோவில் ஊராட்சி ஒன்றியம், மீமிசல் ஊராட்சி, ஆலத்தூரில் கடலோர பேரிடா் தணிப்புத் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு பேரிடா் மேலாண்மை மையத்தில் வடகிழக்கு பருவமழைக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும், அவசர நிலைத் தொடா்பு முறைமைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களின் செயல்திறன்கள் குறித்தும் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், பேரிடா் காலங்களில் மக்கள் தங்கும் வசதிகள், அவசர நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, வருவாய் கோட்டாட்சியா்கள் பா.ஐஸ்வா்யா (புதுக்கோட்டை),இ.அபிநயா (அறந்தாங்கி) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com