பொன்னமராவதியில் வட்டார அளவிலான கலைத் திருவிழா

Published on

பொன்னமராவதி வட்டார வளமையத்தில் செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவா்களின் கலைத்திறனை வெளிக்கொணறும் வகையில் கலைத் திருவிழா நடைபெற்றது.

பொன்னமராவதி வட்டார வள மையத்துக்குள்பட்ட அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பயிலும் 9,10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டியை புதுப்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் நிா்மலா, வட்டாரக் கல்வி அலுவலா்கள் கலா, இலாஹி ஜான் மற்றும் அலமேலு, தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் தேவேந்திரன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். வட்டார வளமைய மேற்பாா்வையாளா் நல்லநாகு முன்னிலை வகித்தாா்.

விழாவில் மாணவா்களின் கலைத் திறனை வெளிப்படுத்தும் வகையில் ஓவியம் வரைதல், களிமண் சிற்பம், செதுக்கு சிற்பம், நாட்டுப்புறப் பாடல் மற்றும் நடனம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

ஏற்பாடுகளை வட்டார கலைத்திருவிழா ஒருங்கிணைப்பாளா் ஆசிரியா் பயிற்றுநா்கள், சிறப்பாசிரியா்கள் ஆகியோா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com