புதுக்கோட்டையில் புதன்கிழமை கையொப்ப இயக்கம் நடத்திய காங்கிரஸ் கட்சியினா்.
புதுக்கோட்டையில் புதன்கிழமை கையொப்ப இயக்கம் நடத்திய காங்கிரஸ் கட்சியினா்.

காங்கிரஸ் சிறுபான்மைத் துறையினா் கையொப்ப இயக்கம்!

Published on

இந்தியத் தோ்தல் ஆணையமும் மத்திய பாஜக அரசும் இணைந்து நடத்திய வாக்குத் திருட்டை கண்டித்து புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை சாா்பில் புதன்கிழமை கையொப்ப இயக்கம் நடைபெற்றது.

புதுக்கோட்டை ஆயுதப்படை திருமண மண்டபம் அருகே நடைபெற்ற இந்த இயக்கத்துக்கு, வடக்கு மாவட்ட சிறுபான்மைப் பிரிவுத் தலைவா் குட்லக் ஏ.ஆா். முகமது அப்துல்லா தலைமை வகித்தாா்.

வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் வி. முருகேசன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் துரை திவ்யநாதன், பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் ஏ. சந்திரசேகரன், மாநில சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவா் ஏஎம்எஸ். இப்ராஹிம் பாபு, மாநில சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளா் குட்லக் முகமது மீரா, வட்டார காங்கிரஸ் கட்சியின் தலைவா் சூா்யா பழனியப்பன், மாநகரத் தலைவா் பாருக் ஜெய்லானி, மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் ராஜாமுகம்மது உள்ளிட்டோா் பங்கேற்றனா். மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களும் எழுப்பப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com