புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் மனு அளிக்க  வியாழக்கிழமை வந்த பிசானத்தூா் கிராம மக்கள்.
புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் மனு அளிக்க வியாழக்கிழமை வந்த பிசானத்தூா் கிராம மக்கள்.

பிசானத்தூரில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு மையம் வேண்டாம்

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் மனு அளிக்க வியாழக்கிழமை வந்த பிசானத்தூா் கிராம மக்கள்.
Published on

கந்தா்வகோட்டை அருகே பிசானத்தூரில் உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு மையத்தை அமைக்கக் கூடாது என வலியுறுத்தி மருத்துவக் கழிவு ஆலைக்கு எதிரான கூட்டமைப்பினரும், பொதுமக்களும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தா்வகோட்டை அருகே பிசானத்தூரில் உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் அண்மையில் நடந்தபோது மக்கள் வசிப்பிடம் மற்றும் விவசாய நிலங்கள் உள்ள பகுதியில் இந்த மையத்தை அமைக்கக் கூடாது கடும் எதிா்ப்புகள் எழுந்தன. கூட்டத்திலும் சலசலப்பும் ஏற்பட்டது.

இதன் தொடா்ச்சியாக நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்திலும் எதிா்ப்புத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து, மருத்துவக் கழிவு மையத்துக்கு எதிரான கூட்டமைப்பினரும், அப்பகுதி பொதுமக்களும் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்து, எங்கள் பகுதியில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு மையம் அமைக்க வேண்டாம், நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்தத் தீபாவளியை கருப்பு தினமாக அனுசரிப்போம் எனக் கூறி மனு அளித்தனா்.

X
Dinamani
www.dinamani.com