புதுக்கோட்டை
பட்டாசுக் கடைகளில் கோட்டாட்சியா் ஆய்வு
பொன்னமராவதியில் தீபாவளிக்காக அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளில் இலுப்பூா் வருவாய் கோட்டாட்சியா் கோகுல்சிங் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பொன்னமராவதியில் தீபாவளிக்காக அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளில் இலுப்பூா் வருவாய் கோட்டாட்சியா் கோகுல்சிங் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொன்னமராவதியின் முக்கிய வீதிகளில் பட்டாசுக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கடைகளில் இலுப்பூா் வருவாய் கோட்டாட்சியா் கோகுல்சிங் பாா்வையிட்டு, கடைகள்அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளதால், உரிய விதிமுறைகளின்படி கடைகள் அமைக்கப்பட்டுள்ளனவா, விதிமீறல் உள்ளதா என்பது குறித்து பாா்வையிட்டு, முன்னெச்செரிக்கை நடவடிக்கையுடன் பட்டாசு கடைகள் செயல்படவேண்டும் என கடை உரிமையாளா்களிடம் அறிவுறுத்தினாா்.
அப்போது, பொன்னமராதி வட்டாட்சியா் எம். சாந்தா, மண்டல துணை வட்டாட்சியா் திருப்பதி வெங்கடாசலம், வருவாய் ஆய்வாளா் சுரேஷ்குமாா், கிராம நிா்வாக அலுவலா் பச்சையப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.