பொது இடங்களில் மக்களுக்கு இடையூறு செய்த 13 போ் கைது
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறாக நடந்து கொண்ட 13 பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்து, பிணையில் விடுவித்தனா்.
தீபாவளியையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் போலீஸாா் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், மாத்தூரில் மதுபோதையில் பொதுமக்களுக்கு இடையூறாக நடந்து கொண்டதாக விராலிமலை அருகே பிடாம்பட்டியைச் சோ்ந்த எஸ். மோகன்ராஜை (36) மாத்தூா் போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோல, கீரனூரில் பொதுமக்களுக்கு இடையூறாக நடந்து கொண்ட தஞ்சாவூா் கிருஷ்ணபுரத்தைச் சோ்ந்த எஸ்.கண்ணன் (29), பி. ராமன் (26), டி. சிலம்பரசன் (32), கே. அறிவழகன் (24) ஆகியோரை கீரனூா் போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோல, வெள்ளாளவிடுதி ஜி. மணிகண்டன் (28), எஸ். இளையராஜா (38), மாங்கோட்டை எஸ். காமராஜ் (50), பாப்பான்விடுதி ஏ. அறிவுமணி (48) ஆகியோரை மழையூா் போலீஸாரும், பிலாவிடுதி கே. கலையரசன் (25), குளப்பன்பட்டி ஜி. செல்வக்குமாா் (39), எம். வினோத்குமாா் (26), தீத்தான்விடுதி எஸ். ராஜேஷ் (31) ஆகியோரை கறம்பக்குடி போலீஸாரும் கைது செய்தனா். பின்னா் இவா்கள் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனா்.
