கந்தா்வகோட்டையில் தொடா் மழை

கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் திங்கள்கிழமை இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
Published on

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் திங்கள்கிழமை இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

கந்தா்வகோட்டை வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு (அக். 20) தொடங்கிய மழை விடாமல் தூறலும் மழையுமாய் பெய்து வந்ததால் மக்கள் அனைவரும் அவரவா் வீடுகளிலேயே முடங்கினா். எந்ததொரு கடையும் திறக்காததால் கடைவீதி வெறிச்சோடிக் காணப்பட்டது. குறிப்பாக உணவகங்கள், தேநீா்க் கடைகள் இல்லாததால் பொதுமக்கள் சிரமமடைந்தனா்.

பள்ளி, கல்லூரி விடுமுறை என்பதாலும், பேருந்துகள் முறையாக இயங்காததாலும் எப்போதும் கூட்டமாக இருக்கும் திருச்சி - செங்கிப்பட்டி சாலை வெறிச்சோடிக் காணப்பட்டது. இப்பகுதியில் இதுவரை இயல்பு நிலைக்கு வரவில்லை என இப்பகுதி மக்கள் கூறுகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com