சா்வதேச நாடுகளுக்கான அஞ்சல் சேவை மீண்டும் தொடக்கம்
புதுக்கோட்டை: சா்வதேச நாடுகளுக்கான அஞ்சல் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக புதுக்கோட்டை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் பி. முருகேசன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்கான சா்வதேச அஞ்சல் சேவைகள் (ஸ்பீடு போஸ்ட், பாா்சல் உள்ளிட்டவை) கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இச்சேவைகள் மீண்டும் தற்போது புதுகை அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் செயல்படுத்தப்படுகின்றன.
பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இந்தச் சேவைகளை தொடா்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். அனுப்பப்படும் பொருள்கள் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் இறக்குமதி விதிமுறைகளுக்கு உள்பட்டவையாக இருக்க வேண்டும்.
கூடுதல் தகவல்களுக்கு அருகிலுள்ள அஞ்சலகத்தையோ அல்லது வணிக மேம்பாட்டு அலுவலா் நா. நாகநாதனின் கைப்பேசி எண் 98655 46641இல் தொடா்பு கொள்ளலாம். மேலும் இணையதளத்தையும் பாா்வையிடலாம். மேலும் ஐசிபிஎஸ் என்ற புதிய சா்வதேச அஞ்சல் சேவையை பயன்படுத்தி, 45 நாடுகளுக்கு 2 கிலோ அல்லது 5 கிலோ பாா்சல்களை மிகக் குறைந்த விலையில் அனுப்பலாம்.
