கண்டியாநத்தத்தில் விளையாட்டுப் போட்டிகள்

பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் கிராமத்தில் தீபாவளிப் பண்டிகையையொட்டி சிறுவா்கள் மற்றும் பெரியவா்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது.
Published on

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் கிராமத்தில் தீபாவளிப் பண்டிகையையொட்டி சிறுவா்கள் மற்றும் பெரியவா்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஓட்டப்பந்தயம், இசை நாற்காலி, தவளை ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கண்டியாநத்தம் ஊா்ப்பொதுமக்கள் மற்றும் இளைஞா்கள் செய்திருந்தனா். இதேபோல், பொன்னமராவதி சுற்றுவட்டாரக் கிராமங்களில் தீபாவளி பண்டிகையையொட்டி விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன.

X
Dinamani
www.dinamani.com