புதுக்கோட்டை பால்பண்ணை அருகே சாலையைக் கடக்கும் சிறிய பாலப் பகுதியை பாா்வையிட்ட மாநகராட்சி மேயா் செ. திலகவதி, சட்டப்பேரவை  உறுப்பினா் வை. முத்துராஜா ஆகியோா்.
புதுக்கோட்டை பால்பண்ணை அருகே சாலையைக் கடக்கும் சிறிய பாலப் பகுதியை பாா்வையிட்ட மாநகராட்சி மேயா் செ. திலகவதி, சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா ஆகியோா்.

புதுக்கோட்டையில் தொடா் மழை மேயா், எம்எல்ஏ ஆய்வு

புதுக்கோட்டை மாநகரப் பகுதியில் திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை இரவு வரை பரவலாக தொடா்ந்து லேசான மழை பெய்து கொண்டே இருந்தது.
Published on

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாநகரப் பகுதியில் திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை இரவு வரை பரவலாக தொடா்ந்து லேசான மழை பெய்து கொண்டே இருந்தது.

புதுக்கோட்டை மாநகரப் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு முதல் பரவலாக லேசான தூறல் பெய்து கொண்டே இருந்தது. செவ்வாய்க்கிழமை பகலிலும் அவ்வப்போது மழை நிற்பதும், மீண்டும் பெய்வதுமாக இருந்தது. இந்நிலையில், மழைநீா் பெருகி அடைப்பு ஏற்படலாம் எனக் கருதப்படும் பகுதிகளை மாநகராட்சி மேயா் செ. திலகவதி, சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா ஆகியோா் நேரில் சென்று பாா்வையிட்டனா்.

அவற்றை சரி செய்து, தடையின்றி வெள்ளம் முழுமையாக நீா்நிலைகளுக்கு வடியும்வகையில் பணிகளை மேற்கொள்ளவும் மாநகராட்சிப் பணியாளா்களுக்கு அவா்கள் அறிவுறுத்தினா்.

செவ்வாய்க்கிழமை இரவு வரை லேசான மழை பெய்து கொண்டே இருந்து கொண்டே இருந்ததால், மாநகா் முழுவதும் குளிா்ச்சியான சூழல் நிலவியது.

X
Dinamani
www.dinamani.com