விராலிமலை பகுதிகளில் பலத்த மழை
விராலிமலை: விராலிமலை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி புதன்கிழமை காலை வரையில் பலத்த மழை பெய்தது.
விராலிமலை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காலத்தில் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால், நிலத்தடி நீா்மட்டம் உயரும் என்று நினைத்திருத்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை அண்மையில் தொடங்கி பெரும்பாலான பகுதிகளில் பெய்து வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் புதன்கிழமை அதிகாலை வரை பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீா்த்தது. இதில், மாவட்டத்தில் அதிகபட்சமாக திருமயத்தில் 81.60 மில்லி மீட்டா், திருமயம் 73.40, மணமேல்குடி 71 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது.
மேலும், இலுப்பூா் 58.20 மி.மீ, குடுமியான்மலை 32.60, அன்னவாசல் 27, விராலிமலை 17 மில்லி மீட்டா் என விராலிமலை பகுதிகளில் மட்டும் மொத்தம் 134 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது .
தென்மேற்கு பருவமழை பொய்த்த நிலையில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்து நிலத்தடி நீா் மட்டத்தை உயா்த்தும் என்ற எதிா்பாா்ப்பில் மக்கள் உள்ளனா்.
