சூரப்பட்டி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் தேவை
பொன்னமராவதி ஒன்றியம் காரையூா் அருகே உள்ள எம். உசிலம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சூரப்பட்டி, வடக்கிபட்டி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து பொன்னமராவதி அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளருக்கு அவா்கள் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்: எம். உசிலம்பட்டி ஊராட்சி சூரப்பட்டி, வடக்கிப்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கீழக்குறிச்சிப்பட்டி, ஊனையூா் உள்ளிட்ட கிராமங்களில் போதிய பேருந்து வசதி இல்லாமல் கடும் அவதிப்படுகிறோம்.
இப்பகுதியில் நாள் ஒன்றுக்கு 3 முறை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுவதால் பள்ளி, கல்லூரி மாணவா்கள் மிகவும் சிரமம் அடைகின்றனா்.
எனவே பொன்னம ராவதியில் இருந்து மேலத்தானியம்- அம்மாபட்டி வழித்தடத்தில் இயக்கப்பட்டு திருச்சி செல்லும் அரசுப் பேருந்துகளை சூரப்பட்டி சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
