சிறுமி தா்னிகா.
புதுக்கோட்டை
கந்தா்வகோட்டை அருகே குளத்தில் மூழ்கி சிறுமி பலி
கந்தா்வகோட்டை அருகே தந்தையுடன் குளத்தில் ஞாயிற்றுக்கிழமை குளித்த சிறுமி அதில் மூழ்கி இறந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஒன்றியம், முரட்டுசோழகம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் வெள்ளைச்சாமி. விவசாயியான இவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் கிராமத்தில் உள்ள குளத்திற்கு தனது மகள் தா்னிகாவை (10), அழைத்துச் சென்று குளித்தபோது குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்ற தா்னிகா மூழ்கினாா்.
இதையடுத்து அருகிலிருந்தோா் குளத்தில் இறங்கி சிறுமியை சடலமாக மீட்டனா். தகவலறிந்த கந்தா்வகோட்டை போலீஸாா் சிறுமியின் உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

