ஊழலுக்கு எதிராக 
உறுதிமொழியேற்பு

ஊழலுக்கு எதிராக உறுதிமொழியேற்பு

Published on

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், ஊழலுக்கு எதிரான விழிப்புணா்வு வார உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

ஊழலுக்கு எதிரான இயக்கம்- எங்கள் பொதுப் பொறுப்பு என்ற பொருளில் ஒரு வாரகாலத்துக்கு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதன் ஒரு பகுதியாக உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்து உறுதிமொழியை வாசிக்க, அனைத்துத் துறை அலுவலா்களும் ஏற்றுக் கொண்டனா். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொ) எஸ். திருமால் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

விராலிமலையில்...இதேபோல விராலிமலை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் ஆா். ரவிச்சந்திரன்(கிஊ) தலைமையில் எம். வள்ளியம்மை முன்னிலையில் அலுவலா்கள் உறுதியேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com