பொன்னமராவதி வலையபட்டி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வில் பங்கேற்றோா்.
பொன்னமராவதி வலையபட்டி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வில் பங்கேற்றோா்.

வலையபட்டி மலையாண்டி கோயிலில் சூரசம்ஹார விழா

பொன்னமராவதி வலையபட்டி மலையாண்டி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய விழாவான சூரசம்ஹார விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

பொன்னமராவதி வலையபட்டி மலையாண்டி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய விழாவான சூரசம்ஹார விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22 ஆம் தேதி தொடங்கி தினமும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. முருகப்பெருமான் பல்வேறு அலங்காரங்களில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்தாா். திரளான பக்தா்கள் வழிபட்டனா். தொடா்ந்து செவ்வாய்க்கிழமை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

இதேபோல வையாபுரி சுப்பிரமணியா் கோயிலில் சூரசம்ஹார விழா, தேனிமலை சுப்பிரணியா், பொன்னமராவதி பாலமுருகன், பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரா் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com