Enable Javscript for better performance
ஆதிதிராவிட கலைஞர்களை மேம்படுத்தவே கலை இரவு\\\'- Dinamani

சுடச்சுட

    

     நலிவுற்ற ஆதிதிராவிட, பழங்குடியின கலைஞர்களைச் சமூக, பொருளாதார ரீதியில் மேம்படுத்துவதற்காகவே தமிழக முதல்வர் கலை இரவு திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார் என்றார் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம்.

    தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அரசர் கல்லூரியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆதிதிராவிடர், பழங்குடி இனக் கலைஞர்களின் கலை இரவு நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து அவர் மேலும் பேசியது: நலிவுற்ற ஆதிதிராவிட, பழங்குடி இன கலைஞர்களை சமூக, பொருளாதாரத்தில் மேம்பாடு அடையச் செய்வதற்காகத் தமிழக முதல்வர் இந்தக் கலை இரவு என்ற புதிய திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார்.

    கலைகளின் பிறப்பிடமான நாட்டுப்புறக் கலைகள் ஒரு நாட்டின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் உலகறியச் செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இத்தகைய கலைகளை நிகழ்த்தும் கலைஞர்களைத் தமிழக முதல்வர் ஊக்குவித்து வருகிறார்.

    இந்த வாய்ப்பை பயன்படுத்தி கலைகளை மேம்படுத்த வேண்டும் என்றார் வைத்திலிங்கம். கடந்த நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற கலைஞர்களுக்கு விருதுகள், சான்றிதழ்கள், ரொக்கப் பரிசுகள் ஆகியவை வழங்கப்பட்டன.

    தமிழக அரசின் முதன்மைச் செயரும், கலை, பண்பாட்டுத் துறை ஆணையருமான எஸ்.எஸ். ஜவஹர், மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம். ரெங்கசாமி, எம். ரெத்தினசாமி, இரா. துரைக்கண்ணு, திருவையாறு ஒன்றியக் குழுத் தலைவர் மலர்கொடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai