Enable Javscript for better performance
காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனத் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு உதவியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    தஞ்சாவூரில் இந்தச் சங்கத்தின் மாவட்டப் பேரவைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. மாவட்ட இணைச் செயலர் எம். சந்திரகாசன் தலைமை வகித்தார்.

    அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காஞ்சிபுரத்தில் நடைபெறும் கால்நடை உதவியாளர் மாநில மாநாட்டில் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மாவட்டப் பொருளர் ம. பன்னீர்செல்வம், மாநில முன்னாள் பொருளர் எம். மரியதாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai