Enable Javscript for better performance
சி.ஐ.டி. காலிப் பணியிட பட்டியல் பரிந்துரை- Dinamani

சுடச்சுட

    

     காவல் துறை சிஐடி சிறப்புப் பிரிவில் இளநிலை அறிக்கையாளர் காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்புத் துறை மூலம் பட்டியல் பரிந்துரைக்கப்படவுள்ளது.

    இதுகுறித்த வேலைவாய்ப்பு அலுவலக செய்திக் குறிப்பு:

    இந்தக் காலிப் பணியிடத்துக்கு மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சியும், ஆங்கில சுருக்கெழுத்தில் மேல்நிலைத் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

    1.7.2012 அன்று பொதுப் பிரிவினருக்கு 30 வயதும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 32 வயதும், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 35 வயதும் இருக்க வேண்டும்.

    வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, கல்விச் சான்று, ஜாதி சான்றுடன் ஏப்.3-க்கு முன்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து பரிந்துரை பட்டியலில் தங்களது

    பெயர் இடம் பெறுவதைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

    பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க அனுமதியில்லை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai