Enable Javscript for better performance
தஞ்சாவூரில் ரத்த தான முகாம்- Dinamani

சுடச்சுட

    

    மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் 73-வது பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூரில் ரத்ததான முகாம், மக்கள் நலப் பணி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

    தஞ்சை மாவட்ட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் வ.உ.சி. நகரில் நடைபெற்ற ரத்த தான முகாமை மருத்துவர் நளினி வரதராஜன் தொடக்கி வைத்தார். இதில், நூற்றுக்கும் அதிகமான ஆதிபராசக்தி இளைஞரணி தொண்டர்கள் ரத்த தானம் செய்தனர்.

    தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கிப் பிரிவு மருத்துவர் ராதிகா மைக்கேல், மருத்துவர் சிவா தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினர் ரத்த தானம் பெற்றனர்.

    பின்னர் நடைபெற்ற மக்கள் நலப் பணி விழாவுக்கு இயக்கத்தின்  மாவட்டத் தலைவர் பி.எஸ். வாசன் தலைமை வகித்தார்.

    இதில், தஞ்சை சட்டப்பேரவை உறுப்பினர் எம். ரெங்கசாமி பங்கேற்று; 25 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள், 3 மாணவர்களுக்கு ரூ.30,000 கல்வி உதவித் தொகை, இருவருக்கு ரூ.25,000 மருத்துவ உதவி உள்ளிட்டவற்றை வழங்கினார். மாவட்டப் பொருளர் ஆர். ஜயராமன், வட்டத் தலைவர் கு. சிவராஜா, தஞ்சை மாவட்ட ஆன்மிக இயக்க இணைச் செயலர் வை. முத்துவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai