Enable Javscript for better performance
\\\"தீர்க்கதரிசியாகவும் திகழ்ந்தவர் மகாகவி பாரதி\\\'- Dinamani

சுடச்சுட

    

    "தீர்க்கதரிசியாகவும் திகழ்ந்தவர் மகாகவி பாரதி'

    By தஞ்சாவூர்,  |   Published on : 01st April 2013 05:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     மனித குலத்தின் மாமனிதராகப் போற்றப்படும் மகாகவி பாரதி ஒரு தீர்க்கதரிசியாகவும் இருந்தார் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன்.

    தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகாகவி பாரதியார் இலக்கிய மாமன்றத்தின் இரண்டாமாண்டு விழாவில் அவர் பேசியது:

    மனித குலத்தைச் செம்மைப்படுத்துவதற்காகவே மதங்கள் தோன்றின. பின்னர் இந்த மதங்களின் பெயராலேயே சண்டைகள் மூண்டு வருகின்றன. தொழில் வளர்ச்சி பெற்ற நாடுகள், பிற நாடுகளைப் படைகள் மூலம் வென்றன. ஆனால், இங்கிலாந்தின்  கிழக்கிந்திய கம்பெனி என்ற வர்த்தக நிறுவனம் தனது தொழிலுக்காக நியமிக்கப்பட்ட பாதுகாப்புப் படைகள் மூலம் இந்த நாட்டைக் கைப்பற்றி 200 ஆண்டுகளுக்கு அடிமைப்படுத்தியது.

    இந்தச் சூழ்நிலையில் பிறந்த மகாகவி பாரதி வேதம் படித்து சாமியாராக மாறாமல் புரட்சி செய்தார். காந்திக்கு மகாத்மா என்ற பெயரை சூட்டியவர் யார் எனத் தெரியாது. ஆனால், காந்தியை மகாத்மா எனப் பாட்டில் குறிப்பிட்டவர் பாரதிதான். காந்தியின் தலைமையில்தான் இந்தியா விடுதலை பெறும் எனக் கூறிய தீர்க்கதரிசி பாரதி.

    ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கூட இந்தியா என்ற நாடு இல்லை. 1950-ல் தான் இந்தியா உருவானது. ஆனால், இந்தியா என்ற நாடு உருவாக வேண்டும் என்ற எண்ணமும், நம்பிக்கையும் பாரதிக்கு இருந்தது. பிளவுபட்டுக் கிடந்த இந்தியாவை ஒன்றுபட வேண்டும் எனத் தனது பாட்டின் மூலம் கூறியவர் பாரதி. வருங்கால கவிஞர்களை வரவேற்ற பாரதியை சமகாலக் கவிஞர்களும் அங்கீகரித்தனர். ஆங்கிலேய அரசும் அங்கீகரித்தது. ஆனால், மறைவுக்கு பிறகுதான் அவரை நாம் போற்றத் தொடங்கினோம் என்றார் பாண்டியன்.

    மாமன்றத்தின் தலைவர் சொ. வேலாயுதம் தலைமை வகித்தார். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் மன்னை மு. அம்பிகாபதி, பாரத் கல்விக் குழுமச் செயலர் புனிதா கணேசன், கவிஞர் தாஜ்பால், மாமன்றப் பொருளாளர் ராஜ. சிமியோன், துணைத் தலைவர் காவேரி முகிலன்

    உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai