Enable Javscript for better performance
மருத்துவர்களுக்கு தொழில் தர்மம் அவசியம்\\\'- Dinamani

சுடச்சுட

    

     மருத்துவர்கள் தொழில் தர்மத்தைக் கடைப்பிடிப்பது அவசியம் என்றார் மருத்துவக் கல்வி இயக்குநர் சி. வம்சதாரா.

    தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவர் மேலும் பேசியது:

    நோயாளிகள், மருத்துவர்களை தெய்வமாக நினைக்கின்றனர். அவர்கள் என்ன கொடுத்தாலும் அதை நோயாளிகள் 100 % நம்பிக்கையோடு பின்பற்றுகின்றனர்.

    தற்போது மனிதர்களிடையே ஒரு மாத்திரையில் நோய் குணமாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதனை நிறைவேற்றவில்லை என்றால் மற்ற மருத்துவர்களை அணுகும் நிலை உள்ளது.  

    நோயாளிகள் கவலை, கஷ்டம், உடல் உபாதைகள் உள்ளிட்டவற்றுடன் மருத்துவர்களிடம் வருகின்றனர்.

    அவர்களை வெறும் பரிசோதனை செய்துவிட்டு, ஒரு மாத்திரையை மட்டும் கொடுத்து 4 நாள்கள் கழித்து வருமாறு கூறுவதால் அவர்களது நோய் குணமாகாது. நோயாளிகளுடன் அன்பாகப் பழகினால் அதுவே அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக இருக்கும்.

    ஸ்கேன் இல்லாமல் மருத்துவம் பார்க்கமாட்டேன் எனக் கூறக்கூடாது. எந்த நேரத்திலும் தன்னை நாடி வரும் நோயாளிகளுக்கு தன்னிடம் இருக்கும் கருவிகள், வித்தைகள், கற்ற மருத்துவத்தின் துணைகொண்டு நோயைக் குணப்படுத்த வேண்டும்.

    மருத்துவத்தைச் சேவையாகக் கருதி ஏழைகளுக்கு இலவசமாகப் பார்க்க வேண்டும். மருத்துவ தொழிலில் தர்மம் இருக்க வேண்டும். சேவையாக நினைக்க வேண்டும். அந்த மாதிரியான வாழ்க்கை பாதையில் பட்டம் பெற்ற மாணவர்கள் செல்ல வேண்டும் என்றார் வம்சதாரா.

    இதில், 130 மாணவ, மாணவிகளுக்குப் பட்டம் வழங்கப்பட்டது.

    கல்லூரி முதன்மையர் கே. மகாதேவன் தலைமை வகித்தார்.   துணை முதல்வர் டி. சிவகாமி, மருத்துவக் கண்காணிப்பாளர் பி.ஜி. சங்கர நாராயணன், மாணவ மன்ற ஆசிரிய ஆலோசகர் எம். சிங்காரவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai