Enable Javscript for better performance
ஈழத் தமிழர்களுக்கு விடுதலை கிடைக்கும் வரை போராட்டம்\\\'- Dinamani

சுடச்சுட

    

    ஈழத் தமிழர்களுக்கு விடுதலை கிடைக்கும் வரை போராட்டம்'

    By தஞ்சாவூர்  |   Published on : 02nd April 2013 05:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     ஈழத் தமிழர்களுக்கு விடுதலை கிடைக்கும் வரை போராட்டம் நடத்துவோம் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன்.

    தஞ்சாவூர் ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற நிதியளிப்புப் பொதுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

    இலங்கையில் தமிழ் மக்களுக்கு விடுதலை கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம். தமிழக சட்டப்பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது பாராட்டத்தக்கது. இதை சட்டப்பேரவையில் அனைத்து கட்சிகளும் ஆதரித்தன. வெளியே வந்த பிறகு இதில் உடன்பாடு இல்லை எனக் கூறுகின்றனர். அவர்கள் யாருக்கு நண்பர்கள் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். வருகிற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணிதான் ஆட்சி அமைக்கும். அதைத் தமிழகம்தான் தீர்மானிக்கும். அதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாகத் துணை நிற்கும். வருகிற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். மத்தியில் பெரும்பான்மையை இழந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசின் கொள்கைகளால் நாட்டின் இயற்கை வளங்கள் அழிந்து வருகின்றன. எனவே, மத்திய ஆட்சியை மாற்ற வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் விரும்புகின்றனர். தமிழகத்தில் மாணவிகளுக்கு ஆங்காங்கே பாலியல் தொந்தரவு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கவும், அதற்கு காரணமானவர்களைக் கண்டித்தும் ஏப். 8 ஆம் தேதி கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது என்றார் பாண்டியன்.

    மாவட்டச் செயலர் இரா. திருஞானம் தலைமை வகித்தார்.

    இதில், தா. பாண்டியனிடம் கட்சியின் மாவட்டக் கிளை சார்பில் ரூ. 9,84,960 நிதி வழங்கப்பட்டது. கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் முத்து. உத்திராபதி, சி. சந்திரகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, மாவட்டப் பொருளாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். நகரச் செயலர் எஸ்.எம். ராஜேந்திரன் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai