Enable Javscript for better performance
திருச்சிற்றம்பலத்தில் பெரியார் நகர்வு புத்தகச் சந்தை- Dinamani

சுடச்சுட

    

    திருச்சிற்றம்பலத்தில் பெரியார் நகர்வு புத்தகச் சந்தை

    By பேராவூரணி,  |   Published on : 02nd April 2013 05:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     பேராவூரணி அருகேயுள்ள திருச்சிற்றம்பலத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியார் நகர்வு பகுத்தறிவு புத்தகச் சந்தை தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பழ.வேதாச்சலம் தலைமை  வகித்தார்.புத்தகச் சந்தையின் முதல் விற்பனையை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்  எஸ்.வி. திருஞானசம்பந்தம் தொடங்கி வைக்க, டாக்டர் வி. செüந்தரராஜன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் விமலாகணேசன் பெற்றுக் கொண்டனர். மாவட்ட துணைத் தலைவர் அரு.நல்லதம்பி, சேதுபாவாசத்திரம் ஒன்றிய திக தலைவர் த. பெரியராசன் உள்ளிட்டோர்  முன்னிலை வகித்தனர். விழாவில் ஒன்றியத் தலைவர் வை.சிதம்பரம், ரா.த. பன்னீர்செல்வம், ச. செல்வராஜ், எஸ்.என். சந்திரபோஸ், ச. கோவிந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai