Enable Javscript for better performance
பாபநாசம் அருகே அதிமுக விளம்பர பதாகை கிழிப்பு- Dinamani

சுடச்சுட

    

     பாபநாசம் அருகே அதிமுக விளம்பர பதாகையை சேதப்படுத்தியவரை போலீஸார் தேடிவருகின்றனர்.

    மெலட்டூர் காவல் சரகம், கரம்பை நடுத்தெருவை சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன்(39) இவர் மெலட்டூர் தேமுதிக நகர துணை செயலராக பதவி வகித்து வருகிறார். கடந்த மார்ச் 26 அன்று மெலட்டூரில் வைக்கப்பட்டிருந்த அதிமுக விளம்பர பதாகையை கையால் குத்தி சேதப்படுத்தினாராம்.

    இது குறித்து மெலட்டூர் அதிமுக நகர செயலர் ஆர். கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் மெலட்டூர் போலீஸார் வழக்கு பதிந்து சந்தானகிருஷ்ணனை தேடிவருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai