Enable Javscript for better performance
வீடு புகுந்து பொருள்கள் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் அருகே வீடு புகுந்து பொருள்களைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை சாலை சுந்தரபுரத்தைச் சேர்ந்தவர் மேனகா. இவர் அண்மையில் வீட்டை பூட்டிவிட்டு ஈச்சங்கோட்டைக்குச் சென்றார்.

    ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பிய அவர் முன் பக்கக் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்ததுடன், வீட்டிலிருந்த கேமரா, வெள்ளி ஆபரணங்கள், கொலுசு, குத்து விளக்கு உள்ளிட்ட பொருள்கள் திருடு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸார் விசாரிக்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai